த.வெ.க மாநாடு: நடிகர் விஜய் பாஜக, திமுக மீது முன்வைத்த விமர்சனங்கள் என்ன? முழு விவரம் - BBC News தமிழ் (2024)

த.வெ.க மாநாடு: நடிகர் விஜய் பாஜக, திமுக மீது முன்வைத்த விமர்சனங்கள் என்ன? முழு விவரம் - BBC News தமிழ் (1)

பட மூலாதாரம், TVK

தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜயின் தவெக கட்சியின் முதல் மாநாடு நடந்து முடிந்துள்ளது. கட்சிக் கொடி ஏற்றுவதில் புதுமையை புகுத்தியிருந்த நடிகர் விஜய், கட்சியின் கொள்கைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். தவெக கட்சியின் கொள்கை வழிகாட்டிகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கட்சியின் வியூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

தவெக மாநாட்டில் என்ன நடந்தது? நடிகர் விஜய் என்ன பேசினார்? முழு விவரத்தை பார்க்கலாம்.

பெரியாரின் கடவுள் மறுப்பு பற்றி விஜய் பேசியது என்ன?

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாலை 4 மணிக்குத் தொடங்கியது.

நடிகர் விஜய், மாநாட்டுக்கு வந்து, திடலில் இருந்த ரசிகர்களைச் சந்தித்தார். அதன்பின், கட்சியின் கொள்கைகளை விளக்கும் ஒரு காணொளி திரையிடப்பட்டது. அதில் கட்சி ‘மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள்’ கொண்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்பின், விஜய் தனது கட்சியின் கொடியை பட்டன் அழுத்தி ஏற்றினார். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசியல் களத்தில் ஓர் அரசியல் தலைவராக தவெக மாநாட்டில் தனது கன்னிப் பேச்சை விஜய் தொடங்கினார். அவர் பேசுகையில், "அரசியல் பாம்பு, அதை பயமறியா ஒரு குழந்தையை போலக் கையில் பிடித்து விளையாடுகிறேன்.

அரசியலில் நான் ஒரு குழந்தை என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் பாம்பைக் கண்டு எனக்கு பயமில்லை. அரசியல் ஒன்றும் சினிமா கிடையாது, போர்க்களம். சீரியஸாக சிரிப்போடு எண்ணங்களை செயல்படுத்துவதுதான் என் வழி. கவனமாகக் களமாடவேண்டும். பாடல் வெளியீட்டு நிகழ்வில் பேசியதிலிருந்து வித்தியாசமான மேடை.

அறிவியல் தொழில்நுட்பம் மட்டும்தான் மாறவேண்டுமா? அரசியலும் மாறவேண்டும். மேடைகளில் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேச வேண்டிய அவசியமில்லை. இப்போது என்ன பிரச்னை அதற்கு என்ன தீர்வு என்பதைச் சொன்னாலே மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடும், இன்று இருக்கும் தலைமுறையை புரிந்துகொண்டால்தான் சுலபமாக முன்னெடுத்துச் செல்லமுடியும் மற்ற அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசி நேரம் விரயம் செய்யப்போவதில்லை, ஆனால் கண்ணை மூடிக்கொண்டு இருக்கப் போவதில்லை." என்றார்.

த.வெ.க மாநாடு: நடிகர் விஜய் பாஜக, திமுக மீது முன்வைத்த விமர்சனங்கள் என்ன? முழு விவரம் - BBC News தமிழ் (2)

பட மூலாதாரம், PTI

இதனைத் தொடர்ந்து, கட்சியின் கொள்கை வழிகாட்டிகள் பற்றி அவர் பேசினார். "பகுத்தறிவுப் பகலவன் பெரியார் கட்சியின் கொள்கை வழிகாட்டியாக இருப்பார். ஆனால், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த விஷயத்தில் அண்ணாவின் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை பின்பற்றுவோம். அதாவது, ஒவ்வொரு தனி மனிதரின் அவரவர் விரும்பும் கடவுளை வழிபடலாம். அதில் கட்சி எந்த வகையிலும் தலையிடாது. அதேநேரத்தில், பெரியாரின் பெண் கல்வி, பெண் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் கட்சி செயல்படும்" என்றார் நடிகர் விஜய்.

காமராஜரின் மதச்சார்பின்மை, நேர்மையான நிர்வாகச் செயல்பாடு மற்றும் அம்பேத்கரின் வகுப்புவாதிப் பிரதிநிதித்துவ கோட்பாட்டை நிலைநிறுத்தவும் சாதிய ஒடுக்குமுறையை எதிர்ப்பதுமே நமது நோக்கம். வீரமங்கை வேலுநாச்சியாரும் தவெகவின் கொள்கை வழிகாட்டியாக திகழ்வார். பெண்களைக் கொள்கைத் தலைவராக ஏற்று வந்த முதல் கட்சி தவெக தான். முன்னேறத் துடிக்கும் சமூகத்தில் பிறந்து முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட அஞ்சலை அம்மாள் நமக்கு வழிகாட்டியாக இருப்பார். சொத்தை இழந்தாலும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் அஞ்சலை அம்மாள்" என்று விஜய் கூறினார்.

இதன் தொடர்ச்சியாக மத்திய, மாநில அரசுகள் மீதும் விமர்சனங்களை அவர் முன்வைத்தார். பாஜகவின் பிளவுவாத அரசியல் தங்களுக்கு முதன்மையான கோட்பாட்டு எதிரி என்று குறிப்பிட்ட நடிகர் விஜய், கரப்ஷன் கபடதாரிகள் என்று மாநிலத்தை ஆளும் திமுகவை சாடினார்.

த.வெ.க மாநாடு: நடிகர் விஜய் பாஜக, திமுக மீது முன்வைத்த விமர்சனங்கள் என்ன? முழு விவரம் - BBC News தமிழ் (3)

கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார்?

தனது கட்சியின் கோட்பாடாக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை - அறிவித்த போதே தனது எதிரியை அறிவித்துவிட்டதாகக் கூறினார் விஜய்.

சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம், எனப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் தான் எதிர்க்கப் போவதாகத் தெரிவித்தார்.

“ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட ‘கலரைப்’ பூசி, ‘ஃபாசிசம்’ என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை,-பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள்,” என்றார் அவர்.

“பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியர், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி,” என்றார் விஜய்.

மேலும், “கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை, இரண்டும் நமது இரண்டு கண்கள்,” என்றார்.

தனது செயல்திட்டத்தின் முக்கிய விஷயமாக, அதிகாரப் பகிர்வைக் கூறினார் விஜய். “2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருந்தாலும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்,” என்றார்.

'நமக்கு ஏன் அரசியல்?’

மேலும் பேசிய விஜய், செயல்தான் முக்கியம் என்றும், சமரசம், சண்டை நிறுத்தத்திற்கு இடமில்லை, ஆனால் வெறுப்பு அரசியலுக்கும் இடமில்லை, என்றும் கூறினார்.

ஆரம்பத்தில் தானும் தனக்கு எதற்கு அரசியல் என்றுதான் நினைத்ததாகவும் ஆனால், அபப்டி நினைப்பது சுயநலம் என்றும் தெரிவித்தார். “என்னை, வாழவைத்த மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்தபோது, அதற்குக் கிடைத்த விடை அரசியல்,” என்றார்.

த.வெ.க மாநாடு: நடிகர் விஜய் பாஜக, திமுக மீது முன்வைத்த விமர்சனங்கள் என்ன? முழு விவரம் - BBC News தமிழ் (4)

பட மூலாதாரம், TVK

த.வெ.க கொள்கைகள் என்ன?

மாநாட்டில் சம்பத்குமார் என்ற கட்சித் தொண்டர் கொள்கைகளை வாசித்தார்.

கட்சியின் கோட்பாடு ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று கூறிய அவர், கட்சியின் குறிக்கோள், ‘மதம், சதி, நிறம், இனம், மொழி, பாலினம், பொருளாதாரம் ஆகியவற்றால் தமிழக மக்கள் சுருங்கிவிடாமல், அனைத்து மக்களின் தனிமனித சமூகப் பொருளாதார அரசியல் உரிமைகளை நிலைநிறுத்திச் சமநிலைச் சமூகம் உருவாக்குவது', என்றார்.

மேலும், “ஆட்சி, சட்டம், நீதி, அரசு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தி மக்களின் அடிப்படைச் சுதந்திரத்தைப் பறிக்கும் மாநில ஒன்றிய ஆட்சியாளர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுவது,” கட்சியின் கொள்கை என்றார்.

இடஒதுக்கீடு பற்றிப் பேசிய அவர், ‘விகிதாச்சார இடப்பங்கீடு’ தான் உண்மையான சமூகநீதி என்றார். “சாதி ஒழியும் வரை அனைத்துப் பிரிவினருக்கும் அனைத்துத் துறையிலும் விகிதாச்சாரத்தின் படி பிரதிநிதித்துவம் வழங்குவது,” கட்சியின் கொள்கை என்றார்.

“பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகளுக்குச் சமத்துவம் வழங்கப்படும்,” என்றார்.

அதேபோல, மாநிலத்தின் தன்னாட்சி உரிமைகளை மீட்பதும், தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையைப் பின்பறுவதும் கட்சியின் கொள்கை என்றார்.

த.வெ.க மாநாடு: நடிகர் விஜய் பாஜக, திமுக மீது முன்வைத்த விமர்சனங்கள் என்ன? முழு விவரம் - BBC News தமிழ் (5)

மாநாட்டு ஏற்பாடுகள் எப்படி?

நடிகர் விஜயை காண பொதுமக்கள் காலை முதலே ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்த வண்ணம் இருக்கின்றனர்.

அக்டோபர் 26ஆம் தேதியன்று மாநாடு நடைபெறும் இடத்தை நேரில் பார்வையிட்ட விஜய் மக்களுக்குத் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டார்.

த.வெ.க மாநாடு: நடிகர் விஜய் பாஜக, திமுக மீது முன்வைத்த விமர்சனங்கள் என்ன? முழு விவரம் - BBC News தமிழ் (6)

த.வெ.க மாநாடு: நடிகர் விஜய் பாஜக, திமுக மீது முன்வைத்த விமர்சனங்கள் என்ன? முழு விவரம் - BBC News தமிழ் (7)

மாநாடு மாலை 4 மணி அளவில் ஆரம்பிக்கவுள்ளது. கொடியேற்றத்திற்குப் பிறகு கட்சித் தலைவர் விஜய்க்கான பாடலும் வெளியிடப்பட உள்ளது.

குறைந்தது 75 ஆயிரம் நபர்கள் அமரும் வண்ணம் இருக்கைகள், 8 பிரிவுகளில் வைக்கப்பட்டுள்ளன. மேடையின் இரண்டு பகுதிகளிலும் தண்ணீர் டேங்குகள் வைக்கப்பட்டுள்ளன.

எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க 3000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 700க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மாநாடு நடக்கும் இடத்தில் பொறுத்தப்பட்டுள்ளன.

த.வெ.க மாநாடு: நடிகர் விஜய் பாஜக, திமுக மீது முன்வைத்த விமர்சனங்கள் என்ன? முழு விவரம் - BBC News தமிழ் (8)

  • லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன்

  • பமீலா ஹாரிமேன்: நாஜிகளுக்கு எதிராக சர்ச்சில் பயன்படுத்திய ரகசிய ஆயுதம்

த.வெ.க மாநாடு: நடிகர் விஜய் பாஜக, திமுக மீது முன்வைத்த விமர்சனங்கள் என்ன? முழு விவரம் - BBC News தமிழ் (9)

த.வெ.க மாநாடு: நடிகர் விஜய் பாஜக, திமுக மீது முன்வைத்த விமர்சனங்கள் என்ன? முழு விவரம் - BBC News தமிழ் (10)

மாநாடு நடக்கும் இடத்தில், 80 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள திடலின் இரண்டு பக்கங்களிலும் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருக்கிறது.

திடலின் உள்ளே 20க்கும் மேற்பட்ட அவசர ஊர்தி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

த.வெ.க மாநாடு: நடிகர் விஜய் பாஜக, திமுக மீது முன்வைத்த விமர்சனங்கள் என்ன? முழு விவரம் - BBC News தமிழ் (11)

த.வெ.க மாநாடு: நடிகர் விஜய் பாஜக, திமுக மீது முன்வைத்த விமர்சனங்கள் என்ன? முழு விவரம் - BBC News தமிழ் (12)

மாநாட்டிற்கு வந்தவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

மாநாட்டிற்கு இன்று காலை முதலே ஆயிரக்கணக்கில் மக்கள் வந்த வண்ணம் இருப்பதால், திடலில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் டேங்குகளில் மதியம் 12 மணியளவிலேயே குடிநீர் தீர்ந்துவிட்டது.

"ஒரு குடிநீர் பாட்டில் வாங்க வேண்டுமென்றாலும், திடலுக்குள் இருந்து குறைந்தது 1-2 கி.மீ வரவேண்டும். மாநாட்டுத் திடலில் வைக்கப்பட்டிருந்த டேங்குகளிலும் குடிநீர் இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக" கூறுகிறார் பிபிசி செய்தியாளர் முரளிதரன்.

த.வெ.க மாநாடு: நடிகர் விஜய் பாஜக, திமுக மீது முன்வைத்த விமர்சனங்கள் என்ன? முழு விவரம் - BBC News தமிழ் (13)

மேலும், அந்தப் பகுதியைச் சுற்றிப் பெரியளவில் கடைகள் இல்லாததால், உணவு கிடைப்பதும் ஒரு பிரச்னையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால், மாநாட்டிற்கு வந்துள்ளவர்களில் பலர் மயக்கம் அடைந்துள்ளனர். மிகக் கடுமையான வெயில், குடிநீர் மற்றும் உணவு கிடைப்பதில் சிக்கல், அதீத கூட்டம், இருக்கைகளின் போதாமை ஆகியவற்றால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

த.வெ.க மாநாடு: நடிகர் விஜய் பாஜக, திமுக மீது முன்வைத்த விமர்சனங்கள் என்ன? முழு விவரம் - BBC News தமிழ் (14)

சுமார் 75,000 இருக்கைகள் வரை மாநாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள் வந்துள்ளனர்.

மாநாட்டிற்காக அமைக்கப்பட்டிருக்கும் கார் நிறுத்துமிடங்கள் முழுமையாக நிறைவடைந்துவிட்ட நிலையில், புதிதாக வாகனங்கள் நிறுத்தப்படுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மாநாட்டிற்கு வரும் மக்கள் கூட்டத்தால் சுமார் 10கி.மீ தொலைவுக்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

த.வெ.க மாநாடு: நடிகர் விஜய் பாஜக, திமுக மீது முன்வைத்த விமர்சனங்கள் என்ன? முழு விவரம் - BBC News தமிழ் (15)

  • மெட்ராஸில் பிறந்து மகாராஜாவை மணமுடிக்க முஸ்லிமாக மாறிய வதோதரா மகாராணி சீதாதேவி

  • கனடா: ஜஸ்டின் ட்ரூடோ விசா விதிகளை கடுமையாக்கியது ஏன்? கனேடிய மக்களின் கவலை என்ன?

‘பல கட்சிகள் காணாமல் போயிருக்கின்றன’

விஜய் கட்சி மாநாடு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், விஜய் தனக்கு நீண்டநாள் நண்பர், அவரைத் தனக்குச் சிறுவயதிலிருந்தே தெரியும் என்று கூறினார். “நான் முதன்முதலில் தயாரித்த திரைப்படம் அவருடையது தான்,” என்றார்.

‘75 ஆண்டுகால திராவிட சித்தாந்தத்துக்கு மாற்றாகவும் சவாலாகவும் புதிய கட்சிகள் அமையுமா?’ என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, எந்தக் கட்சியும் வரக்கூடாது என்று சட்டம் இல்லை, யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம், அவர்களுக்கு அதற்கான உரிமை இருக்கிறது, என்றார்.

“இந்த 75 ஆண்டுகாலமாக வேறெந்த கட்சியும் துவங்கப்பட்டதில்லை என்று கூற முடியாது. பல கட்சிகள் வந்திருக்கின்றன, பல கட்சிகள் காணாமல் போயிருக்கின்றன. மக்கள் பணி தான் முக்கியம். மக்கள் யாரை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது மிக முக்கியம். கொள்கைகள் தான் முக்கியம்,” என்றார்.

த.வெ.க மாநாடு குறித்து சீமான் கூறுவது என்ன?

த.வெ.க மாநாடு: நடிகர் விஜய் பாஜக, திமுக மீது முன்வைத்த விமர்சனங்கள் என்ன? முழு விவரம் - BBC News தமிழ் (16)

"நாங்கள் அரசியலுக்கு வந்த போது எங்களுக்கு இத்தகைய ஆதரவு கிடைக்கவில்லை" என்று கூறிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "விஜய்யின் இந்த மாநாடு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று கூறினார்.

மதுரை தெப்பக்குளம் அருகே மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை செலுத்திய பிறகு பேசிய அவர், "ஒரு அரசியல் கட்சியைத் துவங்கும்போது அது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நாங்கள் எல்லாம் வரும்போது எங்களுக்கு இவ்வளவு ஆதரவு இல்லை. எளிய பிள்ளைகள், திரைப் புகழ் இருக்கும்போது நல்ல வீச்சும் ரீச்சும் கிடைக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

"கட்-அவுட்களில் அரசியல் இல்லை. கருத்தியல் தான் அரசியல். வேலு நாச்சியார், அம்பேத்கர் கட்-அவுட்களை வைப்பது விஷயமில்லை. அவர்களின் பங்களிப்பை எடுத்துச் செல்ல வேண்டும்," என்று பேசிய சீமான் கூட்டணி குறித்தும் கருத்து தெரிவித்தார்.

"ஒரே கொள்கை என்பதால், அழைத்தால்தான் சேர்ந்து நிற்க வேண்டும் இல்லை. அதேநேரம் சேர்ந்து நிற்கக்கூடாது என்றும் இல்லை. காலம்தான் அதைத் தீர்மானிக்க வேண்டும். இதை தம்பிதான் (விஜய்) தீர்மானிக்க வேண்டும்," என்றும் அவர் கூறினார்.

கொடி அறிமுகம் முதல் கொள்கை வெளியீடு வரை

த.வெ.க மாநாடு: நடிகர் விஜய் பாஜக, திமுக மீது முன்வைத்த விமர்சனங்கள் என்ன? முழு விவரம் - BBC News தமிழ் (17)

பட மூலாதாரம், LoyolaMani/X

ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி அன்று சென்னை பனையூரில் அமைந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் கொடியும் பாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.

கட்சிக் கொடியில் இடம் பெற்றிருக்கும் சின்னம் மற்றும் நிறங்களுக்கான அர்த்தம் என்ன என்பது பேசுபொருளானது. மேலும் கட்சியின் கொள்கைகள் என்ன என்பதை விஜய் அப்போது அறிவிக்கவில்லை.

தொண்டர்களுடன் உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட நடிகர் விஜய், அதன் பிறகு கட்சியின் கொள்கைகள் மற்றும் கொடியின் அர்த்தம் என்ன என்பதை இன்றைய மாநாட்டில் அறிவிப்பதாகக் கூறியிருந்தார் நடிகர் விஜய்.

பொதுமக்கள் மட்டுமின்றி இதர கட்சியினருக்கும் இந்த மாநாட்டில் விஜய் விளக்கவுள்ள கட்சிக் கொள்கைகள் குறித்த ஆவல் எழுந்துள்ளது.

நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் கடந்து வந்த பாதை குறித்து மேலும் அறிந்து கொள்ள

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட் - விஜய் சொல்ல வருவது என்ன?

'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்

'தவெக கொடியின் பின்னணியில் வரலாற்றுக் குறிப்பு' - விஜய் என்ன சொன்னார்? திமுக, அதிமுக, சீமான் கூறியது என்ன?

விஜய் கருத்துத் தெரிவித்த தமிழ்நாட்டின் 3 விவகாரங்கள் என்னென்ன? அவரது அரசியல் சார்பு பற்றி என்ன தெரிய வந்திருக்கிறது?

விஜய் கட்சிக் கொடியில் உள்ள வாகை மலர் எதைக் குறிக்கிறது? தமிழ்நாட்டிற்கும் அதற்கும் என்ன தொடர்பு?

நடிகர் விஜய் கட்சிக் கொடியில் உள்ள யானை எதைக் குறிக்கிறது? எதிர்ப்பு எழுவது ஏன்?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

த.வெ.க மாநாடு: நடிகர் விஜய் பாஜக, திமுக மீது முன்வைத்த விமர்சனங்கள் என்ன? முழு விவரம்  - BBC News தமிழ் (2024)
Top Articles
Latest Posts
Recommended Articles
Article information

Author: Rev. Porsche Oberbrunner

Last Updated:

Views: 6128

Rating: 4.2 / 5 (73 voted)

Reviews: 88% of readers found this page helpful

Author information

Name: Rev. Porsche Oberbrunner

Birthday: 1994-06-25

Address: Suite 153 582 Lubowitz Walks, Port Alfredoborough, IN 72879-2838

Phone: +128413562823324

Job: IT Strategist

Hobby: Video gaming, Basketball, Web surfing, Book restoration, Jogging, Shooting, Fishing

Introduction: My name is Rev. Porsche Oberbrunner, I am a zany, graceful, talented, witty, determined, shiny, enchanting person who loves writing and wants to share my knowledge and understanding with you.